Friday, June 14, 2024

ஒரு ஜெபம்

 

ஒரு ஜெபம்

ஆண்டவரே, நான் வயோதிகனாகி வருகிறேன் என்பதை நீர் அறிவீர், என்னை அதிகப்பிரசங்கியாகவும், எவரையும் உரிமையுடன் வற்புறுத்தக் கூடியனாகவும் மாற்றிவிடாதிரும். ஒவ்வொரு விஷயத்திலும் என் கருத்தினை அவசியம் வெளிப்படுத்தியாக வேண்டும் என்ற வேட்கையிலிருந்து என்னை விடுவிப்பீராக, எல்லோருடைய காரியங்களையும் சீர்செய்யும் ஏக்கத்தில் இருந்து என்னை விலக்குவீராக, முடிவில்லா விவரங்களை தேவையில்லாமல் விளக்குவதில் இருந்து என்னைக் காப்பீராக, சுருக்கமாய் விவரிக்கும் ஆற்றலைக் கொடுங்கள். தனிப்பட்ட என்னுடைய வலிகள் மற்றும் கவலைகளைப் பற்றி நான் சொல்ல விரும்பும் போது என் உதடுகளை மூடுங்கள். வருடங்கள் செல்லச் செல்ல அவ்வெண்ணங்கள் அதிகரித்து வருகின்றன, நாட்கள் நகரும்போது அவைகளைப் பற்றிப் பேசும் என் தாகம் அளவில்லாமல் வளர்கிறது. நான் மற்றவர்களுக்கு என்ன செய்தேன் என்று விவரிப்பதிலிருந்து என்னைத் தடுக்கவும், அதற்குப் பதிலாக நான் உம்மிடமிருந்து பெற்ற ஆசீர்வாதங்களை தனிமையில் அமைதியுடன் சிந்தனை செய்யவேண்டும் என்று விரும்புகிறேன். எப்பொழுதாவது நான் என்னுடைய தவறுகளை எண்ணி சிந்திக்கக் கூடிய அற்புதமான பாடத்தை எனக்குக் கற்றுக் கொடுங்கள். பிறரை அதிகாரம் செய்யம் ஆணவகுணம் எனக்கு வேண்டாம். உம்மால் பெற்ற எனது பரந்த ஞானம் மற்றும் அனுபவத்தின் மூலம், அதைப் பயன்படுத்தாமல் இருப்பது எனக்கு பாரமாகத் தோன்றுகிறது, ஆனால் கடைசியில் எனக்கு சில நண்பர்கள் அவசியம் தேவை என்பது உமக்குத் தெரியும். ஆமென்.

No comments: