Tuesday, April 19, 2016

பின்னுட்டங்கள் - 2

பின்னுட்டங்கள் - 2



அன்புமணி ராமதாஸ் பற்றிய பதிவு: இதற்கு என்னுடைய பின்னுட்டம்:

அவர் தந்தை ஆரம்பித்த சாதியக் கட்சியின் சார்பாகத்தான் அன்புமணி முதலமைச்சராக ஆசைப்படுகிறார் என்று கூறுகிறீர்கள். பாட்டாளி மக்கள் கட்சி ஒரு சாதி அமைப்பாக இருந்து அரசியல் இயக்கமாக மாறி இருந்தாலும் தற்போது சாதிக்கு அப்பாற்பட்டு செயல் படுவதாக முன்னிலைப்படுத்திக்  கொள்ளுகிறது. யாராக இருந்தாலும் நாம் சொல்வதை பல்லாயிரம் மக்கள் கேட்பதற்கு ஒரு மேடை தேவை. இதை உருவாக்குவது ஒன்றும் ப்ளாக் ஆரம்பிப்பது போன்ற எளிதான வேலை அல்ல. கிடைத்த மேடையை பயன்படுத்திக்கொள்வதில் என்ன தவறு? அவர் சொல்வது நன்றாய்த்தான் உள்ளது. அது செயல் வடிவில் எவ்வாறு ஆகும் என்பது அவருக்கு ஒரு வாய்ப்பளித்தால் மட்டுமே தெரியும். தற்போது தமிழ்நாட்டை ஆண்டுகொண்டு இருக்கும் மற்றும் ஆண்ட கட்சிகளின் வண்டவாளம் நமக்குத்தெரியும். எனவே முன்னிலைப்படுத்தப்படும் ஒருவருக்கு முதல்வராகும் வாய்ப்பைக்கொடுப்பதில் தவறில்லை என்பது என்னுடைய கருத்து. களத்தில் இருக்கும் நபர்களில் அன்புமணியை விட தகுதியானவர் யார்? குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை!!!!!

இது குறித்து திரு.நெல்லைத்தமிழன் அவர்களின் பின்னுட்டங்களுக்கு என்னுடைய பதில்கள்:

 திரு.நெல்லைத்தமிழன் அவர்களே:
ஒருவர் முதலமைச்சர் ஆகவேண்டும் என்றால் சொந்தக் காசில் கட்டிய கல்லூரியில் அனைவருக்கும் இலவசமாகக் கல்வி வழங்க வேண்டுமா?
மது பற்றி அவர் ஒவ்வொரு மேடையிலும் விரிவாக விளக்கம் அளிக்கிறார். கா.வெ.குரு தவறு செய்து இருந்தால் சட்டம் அதைப் பார்த்துக்கொள்ளும். அன்புமணி சாதி மறுப்புத் திருமனங்களுக்கு எதிரானவர் இல்லை. காதல் என்கின்ற பெயரால் திட்டமிடப்படும் ஏமாற்று வேலைகளில் தான் அவருக்கு உடன் பாடு இல்லை எனக் கூறுகிறார். அவர் சம்பாத்தியத்திற்குக் கணக்குக் காட்ட சட்டத்துக்கு அவர் கடமைப்பட்டவ்ரே. தான் சொல்ல வேண்டியதை கூட்டம் போட்டுத் தானே சொல்லவேண்டியது இருக்கிறது. அதற்கு எவ்வளவு பணம் செலவழித்தார் என்பதற்கு அவர் கணக்குக் காட்டவேண்டும். இது அனைவருக்கும் பொருந்தும். நடிகர் அஜித் முதல்வர் வேட்பாளராக முன்னிலைப்படுத்துவதை யார் தடுத்தார்கள்? ரஜினியையும் தான் அனைவரும் அழைத்தார்கள். வந்தாரா? கடைசியில் விஜயகாந்த் தான் கிடைத்தார். ஏற்கனவே பணக்காரர் என்பதால் கொள்ளை அடிக்க வேண்டியதில்லை என்பது முதல்தர ஜோக். கொள்ளை அடிப்பவர் எல்லோரும் ஏழைகளா? யார் வேண்டுமானாலும் தங்களை உயர் சாதி என்று அழைத்துக்கொள்ளட்டுமே, யார் தடுத்தார்கள்?

நீங்கள் சொல்லும் குறை ஏதும் இல்லாதவர்கள் யார்? எரியும் கொள்ளியில் எந்தக்கொள்ளி நல்ல கொள்ளி என்று தேர்ந்தெடுப்பது மட்டுமே உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் உரிமை. அதற்க்கு மட்டும் நீங்கள் பதில் சொன்னால் போதும். மற்றபடி நெல்லைத்தமிழனோ அல்லது மதுரைத்தமிழனோ முதலமைச்சராக முன்னிலைப்படுத்தப்பட்டால் நான் ஓட்டளிக்கத்தயார். அந்தத் துணிச்சலும் வாய்ப்பும் உங்களுக்கு உண்டா?

4 comments:

துரை எஸ்.ஜெயச்சந்திரன். said...

அன்புமணி ராமதாஸ் ஏற்கனவே மத்தியில் அமைச்சராக இருந்த பொழுது ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியவர்தான். உண்மையில் இப்பொழுது அவர் மத்திய அமைச்சராக இல்லாததற்கு அது தான் காரணம். ஆகவே அவரிடம் முதல்வர் பொறுப்பை ஒப்படைக்க முடியாது.

Selvadurai said...

அவர் மீது உள்ள வழக்கு அரசியல் காரணங்களுக்காக போடப்பட்ட flimsy யான ஒரு வழக்கு. இது குறித்த விபரங்களையும் அவரின் விளக்கத்தினையும் இணைப்பில் உள்ள வீடியோக்களில் பார்த்துகொள்ளவும்.

https://www.youtube.com/watch?v=RXwsY_JIAhg

https://www.youtube.com/watch?v=FYIMzpphPPA

Unknown said...
This comment has been removed by the author.
Selvadurai said...

அன்புமணி மீதுள்ள வழக்கில் உள்ள குற்றச்சாட்டு நிர்வாகக் குறைபாடு என்கின்ற வகையில் உள்ளது. அவர் பணம் வாங்கினார் என்றோ அதற்கான சான்றுகள் உள்ளன என்றோ குற்றப்பத்திரிகையில் இல்லை. ஏற்கனவே அனுமதி கொடுக்கப்பட்ட இரு கல்லூரிகளில் இரண்டாம் ஆண்டு அனுமதி நீட்டிப்பில் மருத்துவக் கவுன்சில் அபிப்பிராயத்தை மீறி சுகாதார அமைச்சகம் முடிவு எடுத்துள்ளது என்பது தான் குற்றச்சாட்டு. வழக்கு பதிவாவதற்கு முன்பே உச்ச நீதிமன்றத்தால் அனுமதி மறுக்கப்பட்டது தவறு என்று தீர்ப்பளிக்கப்பட்டு அதன் அடிப்படையில் அனுமதி நீடிக்கப்பட்டுவிட்டது. இந்த விசயம வேண்டுமென்றே மறைக்கப்பட்டு உள்ளது. இது அரசியல் காரணங்களுக்காகப் புனையப்பட்ட பொய் வழக்கு என்பதற்கு இது ஒன்றே போதும். நமது நீதிமன்றங்களின் கால தாமதத்தினை எதிரணியினர் நன்றாகப் பயன்படுத்தியுள்ளனர். இது தான் அன்புமணி தரப்பு வாதம். இது ஒப்புக்கொள்ளக்கூடியதாகத் தானே உள்ளது??

மேலும் குற்றச்சாட்டின் தன்மையினையும் பார்க்க வேண்டும்!! ஜெயலலிதா மீது உள்ள வழக்கில் ஏற்கனவே ஆயிரம்பக்க தீர்ப்பு கீழ் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டு உயர்நீதிமன்றத்தினால் கணக்குப் பிழையினால் சாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் வாதிடப்படும் விஷயங்கள் நிச்சயமாக தவறு நிகழ்ந்திருப்பதை உறுதி செய்கின்றன. கருணாநிதி தரப்பில் தவறு நிகழ்ந்திருப்பது சாட்சியங்களின் பதிவின் மூலமும் பணப்பட்டுவாடாவின் விவரங்களின் மூலமும் தெள்ளத்தெளிவாக வெளிப்படுகின்றது. அமைச்சர் ஆ.ராசாவின் உதவியாளர் சாதிக்பாட்சா தற்கொலை மூடி ஊற்றப்பட்டுவிட்டது. தவறு நடந்து உள்ளது கண் கூடாகத்தெரிகிறது. இந்த விஷயங்கள் பொது மக்கள் மத்தியில் தாராளமாகப் பேசப்படுகிறது. இந்த வழக்கைப் பொறுத்தவரையில் அப்படி ஏதும் இல்லை

குற்றச்சாட்டின் தன்மையில் வித்தியாசம் உண்டு. ஒன்வேயில் சைக்கிள் ஓட்டுவதும் கொலை கொள்ளை செய்வதும் குற்றம் தான் என்றாலும் ஒரே தன்மையது அல்ல என்பதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்!!!!

மற்றும் என்னுடைய பார்வையில் மனிதன் என்பவன் குற்றம் செய்பவனே!!! பெரும்பான்மையினோர் மகான்கள் அல்ல. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை. ஜனநாயகத்தில் மாற்றம் என்பது எளிதில் நடக்கக்கூடிய விஷயம் அல்ல. இருப்பதில் நல்லதைத் தேர்வு செய்வதே நடைமுறை சாத்தியம். ஓட்டளிப்பதில் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். ஓரிரு அணியினரே ஆட்சிக்கு வராமல் மாற்றுக் கருத்துக்கொண்டவர்களில் ஓரளவிற்கு நல்லவராகவும் தெளிவான பார்வை கொண்டவராகவும் இருப்பவரை தேர்வு செய்து அவருக்கு ஒரு வாய்ப்பளிக்க வேண்டும் என்பதே என்னிடைய நிலைப்பாடு. அப்போது தான் நடுநிலையாளர்களும் நல்லவர்களும் அரசியலுக்கு வருவார்கள். இதில் தவறு இருந்தால் சுட்டிக்காட்டவும்