Thursday, April 21, 2016

முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த்

வாட்சாப்பில் விஜய்காந்த் பற்றி வந்த பதிவிற்கு என்னுடைய பதில்:
விஜயகாந்த்  மீது குறைகள் என்று கூறப்படும் 3 விஷயங்கள் : -
1. சரியாக பேசுவதில்லை -
2. நாட்டை ஆள நிர்வாகத்திறமை வேணும் -
3. கோபப்படுகிறார் - 
மேலே கண்ட குறிப்புகளின் அடிப்படையில் விஜயகாந்தின் தரப்பு இக்குறைகள் அனைத்தும் மிகைப்படுத்தப்பட்டு இருப்பவைகள் என்றும் அவைகள் ஒன்றும் அவரின் தகுதிக்கு எதிரான சரியான காரணிகள் அல்ல என்றும் வாதிடும் முறையில் எழுதப்பட்டதே அந்தப் பதிவு.
  1. சரியாகப்பேசினவர்கள் அனைவரும் நாட்டிற்கு நல்லது செய்திருக்கிறார்களா என்கின்ற வகையினில் அந்த விவாதம் இருந்தது. அப்படியானால் நாட்டிற்கு நல்லது செய்ய வேண்டும் என்றால் அவர் சரியாகப் பேசக்கூடாது என்று சொல்ல வருகிறார்களா? இது ஒரு எதிர்மறையான சிந்தனை!!. தெளிவாகப் பேசுவது என்பது ஒரு ஆட்சியாளர் / நிர்வாகிக்கு ஒரு அடிப்படைத்தகுதி. அந்த திறமை இல்லாதவர் எப்படி அந்தப் பதவிக்கு ஆசைப்படலாம்? மேலும் முன்பு அவர் சரியாகத்தான் பேசினார், இப்போதுதான் அவரால் உடல் நலம் காரணமாகப் பேச முடியவில்லை என்பது ஒரு வாதம். இந்தக் குறைபாடு ஏன வந்தது?? அதீதக் குடியினால் வந்த இந்தக் குறைபாட்டினை மறைத்துப் பேசுவதால் யாரை எமாற்றப் பார்க்கிறார்கள்? இது மோசமடையுமே தவிர ஒருபோதும் சரியாகாது. இவருக்கு வாக்களித்து அவர் வெற்றி பெற்றால் அவரைச் சுற்றி இருப்பவர்களே அவருடைய ஸ்தானத்தில் ஆட்சி செய்வார்கள் என்பதே நிதர்சனம்!!
  2. அடிப்படையான கல்வி அறிவு ஒரு நிர்வாகிக்குத் தேவை என்பது காலத்தின் கட்டாயம். ஒரு சாதாரண எழுத்தருக்குக் கூட பட்டப்படிப்பு தேவை என்கின்ற காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம்!!. ஒரு பெரும் பொறுப்பு வகிக்க நினைக்கிறவரிடத்தில் இதை எதிபார்ப்பது நியாயம் தானே.  
இவர் நடிகர் சங்கத்தின் கடனை அடைத்தார் என்பது ஒரு சாதனை என்று கூறப்படுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை எனத்தெரியவில்லை. எனினும் பணம் படைத்த உறுப்பினர்கள் இருக்கும் ஒரு சங்கத்திற்கு அதின் கடனை அடைப்பதா ஒரு சாதனை? இது என்ன ஒரு நிர்வாகத் திறமை என்று புரியவில்லை!! நிர்வாகத்திறமை இல்லாத பலர் ஆட்சியில் நாம் இருந்திருக்கிறோம் என்பதால் மீண்டும் ஒரு நிர்வாகத்திறமை இல்லாதவரிடம் ஆட்சியை ஒப்படைப்பதில் தவறில்லை என்பது என்ன வாதமோ!! எதிர்க் கட்சி தலைவராகச் செயல்படும் வாய்ப்பு இவருக்குக் கிட்டிய போது அதில் அவர் தனது நிர்வாகத் திறமையைக் காட்டினாரா? அ.தி.மு.க. / தி.மு.க. இவைகளுக்கு மாற்று என்று களத்தில் வந்தவர் பின்பு அ.தி.மு.க.வுடன் கூட்டு வைத்து அசிங்கப்பட்டு மேலும் தி.மு.க. விடம் பேரம் படியாமல் இன்று ஒரு உருப்படாத கூட்டணியால் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுகிறார். அம்மாவிடம் பல கோடிகள் பணம் வாங்கிகொண்டு தடம் மாறினார் என்று சொல்லப்படுகிறது. இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் இவரைத் தேர்ந்தெடுப்பதைவிட தற்கொலை செய்து கொள்ளலாம்!! தேர்தல் களத்தில் இவரின் சமீபத்திய நடவடிக்கைகளை உற்று நோக்கியவர்கள் இவரை ஒரு சராசரி மனிதனாகக் கூட மதிக்க மாட்டார்கள். அப்படி இருக்கும் போது இவரை ஒரு தலைவர் என்று எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்!!
  1. கோபத்தை வெளிக்காட்டிக் கொள்ளுவது என்பது சாதாரண ஒரு மனிதனுக்கே ஒரு முறை சார்ந்த விஷயமாக உள்ளது எனும்போது ஒரு தலைவனுக்கு அது எப்படி இருக்க வேண்டும் என்பதை எண்ணிக் கொள்ளுங்கள்!!. எவ்வளவு கோபம் இருந்தாலும் அதனை வெளிக்காட்டுவதில் தான் ஒரு மனிதனின் தரம் தெரியும். இவரின் கோப வெளிப்பாடுகளை பல முறை நாம் இணையதளக் காணொளிகளில் கண்டு சிரித்திருக்கிறோம். இதில் ஒரு தலைவனாக அல்ல ஒரு மனிதனாகக் கூட இவரை நாம் மதிக்க முடியாது என்பதை அனேகமாக அனைவரும் ஒப்புக்கொள்ளுவார்கள் என்று நம்புகிறேன்.!! வெள்ளத்தில் இவர் சாதித்த சாதனைகளை நாம் அறிவோம். சம்பந்தம் இல்லாத பொது மக்கள் பலரும் சாதித்ததை விட இவர் என்ன பெரிதாகச் சாதித்துவிட்டார்? இதற்காக இவரை முதலமைச்சர் ஆக்கவேண்டுமா என்ன?? காமராசரைத் தோற்கச் செய்த செயலுக்கான தண்டனையை நாம் பல வருடங்களாக அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். இவரைத் தேர்வு செய்து மரண தண்டனைக்கு ஒப்பான ஒரு தண்டனையைப் பெறுக்கொள்ள வேண்டாம் என்பதே தமிழ்நாட்டு மக்களுக்கு நான் விடுக்கும் வேண்டுகோள்.
விஜயகாந்தும் அவரைச் சேர்ந்தவர்களும் நாட்டைப் பாழாக்க வந்திருக்கும் நோய்க்கிருமிகள். இந்தத் தேர்தலில் அவர்களை பூண்டோடு தோற்கடித்து தக்க பாடம் புகட்ட வேண்டுவதே நம் நாட்டுக்குச் செய்யும் சீரிய பணி.


இறுதியாக பல காலங்கள் நாம் சிந்திக்காமல் ஓட்டுப்போட்டு உருப்படாதவர்களையே தேர்ந்தெடுத்து தலைவர்களாக்கியிருக்கிறோம். ஐந்தாண்டிற்கு ஒரு முறை கிடைக்கும் வாய்ப்பை நல்ல முறையில் சிந்தித்து பயன்படுத்தி இருப்பவர்களில் நல்லவர்களைத் தேர்வு செயது ஒரு மாற்றத்தினைக் கொண்டுவர முயலுவோமாக!!! இதற்காக சிறிது நேரம் ஒதுக்கி நாட்டு நடப்புகளையும் களத்தில் உள்ளவர்களின் நிறை குறைகளையும் அலசி ஆராய்ந்து ஒரு நல்ல முடிவுக்கு வருவோம். தொழில்நுட்ப வளர்ச்சியினால் நமக்கு பல தகவல்களும் புள்ளி விபரங்களும் கிடைக்கின்றன. இவைகளை ஆராய்ந்து அறிய நமக்கு நல்ல வாய்ப்பு உள்ளது. அனைவரும் சிரமம் பார்க்காமல் இந்த வாய்ப்பை பயன் படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். பின்னிட்டு வருந்துவதால் என்ன லாபம்?? எதிர்கால சந்ததிகளின் நலனை முன்னிட்டு இதனை நாம் அவசியம் செய்ய வேண்டும்.  

4 comments:

Unknown said...
This comment has been removed by the author.
துரை எஸ்.ஜெயச்சந்திரன். said...

விஜயகாந்த் எந்த ஒரு சமூக பின்னணியும் இல்லாதவர். அவரைப் பற்றி நாம் அறிந்ததெல்லாம் திரைப்படங்களில் அவருடைய தோற்றம்தான். அதற்கும் அவருடைய உண்மையான குணத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பொதுவாக திரைப்படங்களில் நாயகர்களாக நடிப்பவர்கள் உண்மை வாழ்க்கையில் கெட்டவர்களாகவும் எதிர்மறையான (வில்லன்) வேடத்தில் நடிப்பவர்கள் நல்லவர்களாகவும் இருப்பது தான் பொது மரபாக இருக்கிறது. ஆகவே அவரை தாரளமாக ஒதுக்கி விடலாம். உண்மையிலேயே அவருக்கு நல்ல மனமும் செயலாற்றும் திறமையும் இருந்திருந்தால் அதை அவர் கடந்த ஐந்து வருடங்களில் எதிர் கட்சித்தலைவர் ஆக இருந்த நிலையில் நிரூபித்திருக்கலாம்

வலிப்போக்கன் said...

துரை ஜெயசந்திரன் கருத்தை வழி மொழிகிறேன்..

துரை எஸ்.ஜெயச்சந்திரன். said...

வழிபோக்கன் அவர்களுக்கு எனது நன்றி.
துரை எஸ். ஜெயச்சந்திரன்.