Thursday, May 19, 2016

தமிழ்நாடு தேர்தல் 2016 – முடிவுகள்




வரவேற்கத்தக்க அம்சங்கள்:
  1. தி.மு.க.வின் தோல்வி: தி.மு.க. வசம் ஆட்சி செல்வது நல்லதல்ல. அதிலிருந்து தப்பித்தோம். அதே சமயம் அ.தி.மு.கவுக்கு அடுத்து அது பலத்துடன் இருப்பதால் ஜெயலலிதா அதிகம் ஆட்டம் போடாமல் கட்டுக்குள் இருப்பார்.
  2. விஜயகாந்த், சீமான் போன்ற அரசியல் கோமாளிகளின் கூத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி.
  3. பாட்டாளி மக்கள் கட்சி, பா.ஜ.க. ஆகியவை தமது சாதீய, மதவாத சாயங்களினின்று விடுதலை அடைய வேண்டும் என்கின்ற படிப்பினை.
  4. வைகோவிற்கு ஒரு வலுவான குட்டு இனி யாரும் அவரை நம்பிச்செல்ல மாட்டார்கள் என நம்பலாம்.
  5. நல்ல வேளையாக தொங்கு சட்டமன்றம் அமையவில்லை. அமைந்திருந்தால் நம் அரசியல் வாதிகளின் அந்தர்பல்டிகளைக் கண்டு நாம் அசந்து போயிருப்போம்!

வருந்தத்தக்க அம்சங்கள்:

  1. நமது மக்களுக்கு இன்னும் புத்தி வரவில்லை. இத்தனை ஆண்டு காலம் செயல்படாதவர்களையும் ஊழல்வாதிகளையும் மட்டுமே தேர்ந்து எடுத்து ஆட்சி செய்ய வைத்து இருக்கிறோம். இப்போதாவது ஒரு மாற்று அரசியலுக்கு வழிவகுத்து இருக்கலாம். தி.மு.க. - அ.தி.மு.க தவிர்த்த யாரையாவது ஊக்குவித்து இருக்கலாம். இவர்கள் இருவரையும் தவிர்த்து யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டளித்து இருந்தாலும் இதே ரிசல்ட் தான் வந்து இருக்கும். ஆனாலும் தி.மு.க. - அ.தி.மு.க வாக்கு சதவீதம் குறைந்து அவர்களுக்கு ஒரு பயம் ஏற்பட்டு இருக்கும். இப்போது உள்ள நிலைமையில் நம்மை விட்டால் வேறு கதியில்லை என்கின்ற மிதப்பு இரு தரப்பினருக்குமே இருக்கும். இந்த நிலை தவிர்க்கப்பட்டு இருக்கலாம். நல்ல வாய்ப்பினை தவறவிட்டு விட்டோம்.
  2. மாற்று அரசியலுக்கு முயன்றவர்களை ஊக்குவிக்கத் தவறிவிட்டோம். ஒதுங்கி நிற்கும் நல்லவர்கள் இனி ஒருபோதும் உள்ளே வரத்தயங்குவதற்கு வழிவகுத்துவிட்டோம். இப்போது இருக்கும் மாற்று நபர்கள் சரியில்லை என்றாலும் கூட மக்களுக்கு மாற்று அரசியலில் ஆர்வம் இருக்கிறது என்கின்ற விஷயத்தை பதிவு செய்யத் தவறிவிட்டோம்.
  3. மாற்றத்திற்கான வாய்ப்புக்கு இன்னும் ஐந்து வருடங்கள் காத்து இருக்க வேண்டும்.
  4. ஜெயலலிதா இனி பிச்சை போடுவார். அதற்காக நமக்கு தெண்டம் போடுவார். எதைபற்றியும் கவலைப்படாமல் கொடநாட்டில் போய் படுத்துக்கொள்ளுவார். அனைவரும் அவருக்குப் பள்ளிஎழுச்சி பாடி தவம் இருக்க வேண்டும்!! நம் தலை எழுத்து!!! குடிமகன்களை மட்டுமே ஆதரிப்பார்!! சாராய வியாபாரம் அமோகமாக நடைபெறும்!!!

No comments: