Sunday, May 8, 2016

பின்னூட்டங்கள் – 3


எனது வாக்கு மக்கள் நலக்கூட்டணிக்கு.- 1&2


"சங்கர் எனும் இளைஞர் சாதி வெறியர்களால் பட்டப்பகலில் வெட்டிச் சாய்க்கப்பட்ட போது என்ன செய்ய முடிந்தது ? அதே சாதியக் கட்சிகளோடு கூட்டணி ஒப்பந்தம் பேசிக்கொண்டிருந்தீர்கள்"

சங்கர் கொலை விவகாரம் ஒரு குடும்பத்தின் அறியாமை. இதற்கும் அரசியலுக்கும் என்ன சம்பந்தம்? சாதி ஒழிய தேவை சமுதாய மாற்றமே. அரசியலுக்கும் அதற்கும்சம்பந்தமில்லை. அதற்காக விஜயகாந்த் போன்ற செயல்பட முடியாதவர்களை முன்னிலைப் படுத்தும் கே.வி.கூ. வை (மக்கள் நலம் எங்கே இருக்கிறது?) ஏற்றுக்கொள்வது அபத்தத்தின் உச்சம்.

உங்களுக்காகத்தான் தன் தரத்தை இழந்து அ.தி.மு.க அரசை பற்றி எல்லோரும் சொல்ல மறந்தவற்றை சொல்ல பயந்தவற்றை உளறினார்.இன்று அவர் உங்களுக்கெல்லாம் நகைச்சுவைக்கு தேவைப்படுகிறார்

உளறுபவர் என்றும் நகைச்சுவையாளர் என்றும் நீங்களே சொல்கிறீர்கள். அப்படி ஒருவரை முதல்வராக முன்னிலைப்படுத்தும் ஒரு கூட்டணிக்கு ஆதரவு கொடுப்பேன் என்று சொல்கிறீர்கள். உங்களை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. சட்டிக்குத் தப்பி அடுப்பில் விழுந்துவிடலாம் என்று சொல்ல வருகிறீர்களா?  

குடும்பம் என்பது தான் சமூகத்தின் ஆதாரம். ஒரு குடும்பம் அறியாமையில் உள்ளது எனில் நீங்கள் அதை சமூகத்தின் அறியாமை என்று தானே எடுத்துக்கொள்ள வேண்டும்.சமூதாய மாற்றத்தை கொண்டு வர என்ன வழி? அரசியல் தானே அதற்கு வழி.

சாதி உணர்வு என்பது காலம்காலமாக நமது சமுதாயத்தில் இருந்துகொண்டுதான் வருகிறது. அவனவன் தன் சாதி உயர்ந்தது என்று நினைப்பதில் தவறில்லை. ஆனாலும் அடுத்தவன் சாதி தாழ்ந்தது என்கின்ற உணர்வுதான் தவறு. சமூக, பொருளாதார வளர்ச்சியினால் இன்று இத்தகைய உணர்வு குறைந்துகொண்டுதான் இருக்கிறது. சாதி மறுப்பு திருமணங்கள் கூட அதிகரித்துக்கொண்டுதான் வருகின்றன. காலப்போக்கில் சமுதாய வளர்ச்சியில் இது சரியாகப் போகும். இதற்கும் ஆட்சி அரசியலுக்கும் என்ன சம்பந்தம் என்பதுதான் என் கேள்வி. இதை சட்டம் போட்டா மாற்றமுடியும்? மேலும் கே.வி.கூ. அணியின் ஒருங்கிணைப்பாளர் கலைஞரை எப்படி விளித்தார் என்று நாம் அனைவரும் அறிவோம். இதை அவர் கலைஞரிடம் மன்னிப்புக்கேட்டுவிட்டாலும் அந்த சமுதாயத்தினரின் மனம் எவ்வளவு கொதிப்படைந்து இருக்கும் என்று நினைத்துப்பார்த்தீர்களா? அவரின் உள்ளுணர்வுதான் இந்த வெளிப்பாடு. மன்னிப்புக்கேட்டுவிட்டாலும் அந்த உணர்வே மாறி இருக்குமா என்பது சந்தேகமே. நான் அவரைக் குற்றப்படுத்தவில்லை. அவர் ஒரு சராசரி மனிதனாகத்தான் நடந்துகொண்டார். இவரின் வழிநடத்துதலில் உள்ள ஒரு அணிக்கு எப்படி ஆதரவு அளிக்கிறீர்கள் என்று நீங்கள்தான் விளக்கவேண்டும்.

உடுமலைப்பேட்டை சங்கர் விஷயத்தில் ஒரு 19 வயது பெண்ணும் 21 வயது ஆணும் அறியாமையினால் எடுத்த சிறுபிள்ளைத்தனமான முடிவினை எதிர்கொள்ள அந்தப் பெண்ணின் வீட்டார் அறியாமையினால் எடுத்த விபரீத முடிவு தான் இந்த சம்பவம். இதற்கும் அரசியலுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை என்பதுதான் என்னுடைய கருத்து. ஆட்சி அதிகாரம் இதற்கு எந்த வகையில் பயன்படும்?


விலை இல்லா பொருட்கள் உண்மையில் அவசியமற்றதா?-மக்கள் என் பக்கம்



நாம் அனைவருமே பெரும்பாலும் கிரைண்டர் மிக்சி இல்லாமல் வளர்ந்தவர்கள் தான். பொருளாதார வளர்ச்சி அடைந்தவுடன் எல்லாவற்றையும் வாங்கி விட்டோம். எனவே மக்களை பொருளாதார முன்னேற்றத்திற்கு வழிநடத்துவதுதான் அரசாங்கத்தின் கடமையே தவிர அவற்றை இலவசமாகக் கொடுத்து மக்களை சோம்பேறியாக்குவது அல்ல. பசிக்கு ஒரு மீனைக் கொடுப்பதைவிட மீன் பிடிக்கக் கற்றுக்கொடுத்தால் ஒருவேளை பசியாறுவதர்க்குப் பதிலாக வாழ்நாள் முழுவதும் பசியாறலாம் என்று ஒரு ஆங்கிலப்பழமொழி உண்டு.


இலவச லேப்டாப் பற்றிக் குறிப்பிட்டீர்கள். இலவசமாக வரும் எந்தப் பொருளுக்கும் அதற்குண்டான மரியாதை இருக்காது. அநேகம் பிள்ளைகள் குறைந்த விலைக்கு அதை விற்றுவிடுகிறார்கள். பலர் அதை வைத்து படங்கள் தான் பார்க்கின்றார்கள் (ஆபாசப்படம் உள்பட). ஒழுங்கான வழியில் அதை பயன் படுத்துபவர்கள் மிகவும் சொற்பமே. அதற்கு பதிலாக அந்தப் பணத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் தனியாக இன்டர்நெட் வசதியுடன் கணினிலேபை நிறுவி பள்ளி நேரம் கழித்து ஆசிரியர் ஒருவரின் மேற்பார்வையில் பாடம் படிக்க வைக்கலாம். இது மாணவர்கள் கெட்டுப்போவதைத் தவிர்க்கும். மேற்பார்வை இல்லாமல் பள்ளி மாணவர் கையில் லேப்டாப் போன்ற நவீனக் கருவி கிடைத்தால் தவறான பயன்பாட்டுக்குத்தான் வழிவகுக்கும். இலவச லேப்டாப் பெற்றுக்கொண்ட பல மாணவர்களின் கணினி அறிவினை நான் சோதித்துப்பார்த்தேன். சொந்தத்தில் அவர்கள் கணினி வைத்து இருந்தும் அதன் பயன்பாட்டில் அவர்களுக்கு சரியான புரிதல் இல்லை. இது தான் நிதரிசனமான உண்மை. இதை யாரும் கண்டுகொள்வதாக இல்லை. மேம்போக்காக இலவச லேப்டாப்பைப் புகழுகிறார்கள். அவர்கள் இதை ஆராய்ந்து பார்ப்பதில்லையா அல்லது மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்கின்ற பயத்தில் உண்மையை வெளியே சொல்லுவதில்லையோ தெரியவில்லை!!!        

No comments: