Tuesday, May 17, 2016

எதிர்கால நம்பிக்கை நட்சத்திரங்கள்

எதிர்கால நம்பிக்கை நட்சத்திரங்கள்


இந்த வீடியோ ஏற்கனவே சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டுவிட்டது. நிகழ்ச்சியாளரின் கேள்விகளுக்கு ஒரு பொறுப்புடன் பதிலளிக்கும் நாகரீகமோ, பொது அறிவோ அல்லது எளிய கேள்விகளுக்கே பதில் தெரியவில்லையே என்கின்ற வெட்கமோ, குற்ற உணர்வோ இல்லாமல் அலட்சியமாகவும் கேலி, கிண்டலாகவும் பதிலளிக்கும் பொறுப்பற்ற இளைய தலைமுறையின் போக்கு எனக்கு மிகுந்த வருத்தத்தை அளித்தது. எதிர்கால நம்பிக்கை நட்சத்திரங்களான இவர்களே இப்படி ஆகிவிட்ட போது இனி இறைவன் தான் நம் நாட்டைக் காப்பாற்ற வேண்டும்!!! படித்த திமிர் அனைவர் முகத்திலும் அப்பட்டமாகக் காணப்படுகிறது. இந்த நிலை மாறுமா????

 தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி மாவட்ட வாரியாக தேர்தல் சதவீதத்தை வெளியிட்டுள்ளார். தர்மபுரி 85.03 சதவீதத்துடன் முதலிடத்திலும், சென்னை60.99 சதவீதத்தடன் கடைசி இடத்திலும் உள்ளது. தமிழகத்தில் 74..26 சதவீதம் ஓட்டுக்கள் பதிவாகியுள்ளதாகவும் லக்கானி கூறியுள்ளார்.
லக்கானி வெளியிட்ட விபரம்:
01. திருவள்ளூர்: 71.20 சதவீதம்
02. சென்னை: 60.99 சதவீதம்
03. காஞ்சிபுரம்: 68.77 சதவீதம்
04. வேலூர்: 77.24 சதவீதம்
05. கிருஷ்ணகிரி: 78.38 சதவீதம்
06. தர்மபுரி: 85.03சதவீதம்
07. திருவண்ணாமலை: 82.99 சதவீதம்
08. விழுப்புரம்: 79.44 சதவீதம்
09. சேலம்: 80 சதவீதம்
10. நாமக்கல்: 82.10 சதவீதம்
11. ஈரோடு: 79.39 சதவீதம்
12. நீலகிரி: 70.53 சதவீதம்
13. கோவை: 68.13 சதவீதம்
14. திண்டுக்கல்: 79.62 சதவீதம்
15. கரூர்:83.09 சதவீதம்
16. திருச்சி: 75.77 சதவீதம்
17. பெரம்பலூர்: 79.54 சதவீதம்
18. கடலூர்: 78.64 சதவீதம்
19. நாகை: 76.05 சதவீதம்
20. திருவாரூர்: 78.04 சதவீதம்
21. தஞ்சாவூர்: 77.44 சதவீதம்
22. புதுக்கோட்டை: 77.07 சதவீதம்
23. சிவகங்கை: 69.80 சதவீதம்
24. மதுரை: 71.09 சதவீதம்
25. தேனி: 75. 29 சதவீதம்
26. விருதுநகர்: 66.36 சதவீதம்
27. ராமநாதபுரம்: 67.78 சதவீதம்
28. தூத்துக்குடி: 71.17 சதவீதம்
29. திருநெல்வேலி: 71.94 சதவீதம்
30. கன்னியாகுமரி: 66.32 சதவீதம்
31. அரியலூர்: 83.77 சதவீதம்
32. திருப்பூர்: 72.68 சதவீதம்

சென்னையில் படித்தவர்கள் அதிகம். அனால் அங்குதான் ஓட்டுப் போட்டவர்கள் சதவிகிதம் குறைவு. பொதுவாகவே நகரங்களில் வாக்குப்பதிவு சதவிகிதங்கள் குறைவாகவே இருக்கின்றன. இதன் காரணம் என்ன? படித்தவர்களின் அக்கறையின்மையா?

 http://tamil.thehindu.com/       Dated 17th May 2016 செய்தியைப் பாருங்கள்.
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பூங்காநகரிலுள்ள நரிக்குறவர் காலனியில் வசிக்கும் 133 நரிக்குறவர்கள் நேற்று ஆர்வமுடன் வாக்களித்தனர். இவர்களில் 65 பேர் முதன்முறையாக நேற்று வாக்களித் தனர்……… இங்குள்ள 133 நரிக்குறவர்களிடம் வாக்குக்கு பணம் கொடுக்க கடந்த சில நாட்களாக அரசியல் கட்சிகள் முயன்றுள்ளன. ஆனால் பணம் வாங்க இங்குள்ள பெரியவர்கள் மறுத்துவிட்டதாக வாக்களித்துவிட்டு திரும்பிய மோகன் (67) தெரிவித்தார்.
அவர் மேலும் கூறும்போது, “வாக்காளர் பட்டியலில் எங்களது பெயரை சேர்த்தபின்னர்தான் அரசியல்வாதிகள் எங்கள் பகுதிக்கு வந்துள்ளனர். கடந்த 25 ஆண்டுகளாக எங்கள் இடத்துக்கு அவர்கள் வந்ததே இல்லை. எனவே, ஓட்டுக்கு உள்ள மரியாதையை தெரிந்துகொண்டதால் யாரிடமும் காசு வாங்கவில்லைஎன்று தெரிவித்தார். இது குறித்து பிரமிளா என்பவர் கூறும்போது, “நாங்கள் பாசி, ஊசி, மாலை விற்று பிழைப்பு நடத்துபவர்கள்தான். சில நேரங்களில் பிச்சை எடுத்தும் பிழைக்கிறோம். ஆனால் நாங்கள் ஓட்டுக்கு காசு வாங்கவில்லை. இது சத்தியம். காசு வாங்கினால் எங்களுக்கு அரசியல்வாதிகள் எதையும் செய்து தரமாட்டார்கள். எங்களுக்கு எல்லாவற்றையும் அரசு அதிகாரிகள்தான் இதுவரை செய்து கொடுத்திருக்கிறார்கள்என்றார்.
படிக்காத பாமர மக்களின் விழிப்புணர்வைப்பாருங்கள்!! நாம் எங்கே சென்றுகொண்டிருக்கிறோம் என்று நினைத்தால் பயமாக இருக்கிறது. யார் நமது உண்மையான நம்பிக்கை நட்சத்திரங்கள்??????? உங்கள் சிந்தனைக்கு!!!

No comments: